Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தெற்கு மீன்பிடித் துறைமுகங்களில் 4 படகுகளில் தீ பரவல்!

T

The Leader Desk

அக்டோபர் 21, 2024 • 8:07 AM

தெற்கு மீன்பிடித் துறைமுகங்களில் 4  படகுகளில் தீ பரவல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கந்தர மீன்பிடித் துறைமுகம் மற்றும் மாத்தறையை அண்மித்த ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட குடாவெல்ல மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு மீன்பிடி படகுகள் இன்று (21) அதிகாலை தீக்கிரையாகியுள்ளன.
  • இன்று (21) காலை 7:00 மணியளவில் கந்தர மீன்பிடி துறைமுகத்தில் பல நாள் மீன்பிடி படகு தீப்பிடித்து எரிந்ததையடுத்து மீனவர்கள் உடனடியாக மற்றைய படகுகளில் இருந்து தீப்பிடித்து எரிந்த படகை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
  • இச்சம்பவம் தொடர்பாக மீன்பிடி படகின் உரிமையாளர் கந்தர பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
  • இதேவேளை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்துக்குச் சொந்தமான பல நாள் படகு ஒன்று இன்று (21) காலை தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:

கந்தர மீன்பிடித் துறைமுகம் மற்றும் மாத்தறையை அண்மித்த ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட குடாவெல்ல மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு மீன்பிடி படகுகள் இன்று (21) அதிகாலை தீக்கிரையாகியுள்ளன.

இன்று (21) காலை 7:00 மணியளவில் கந்தர மீன்பிடி துறைமுகத்தில் பல நாள் மீன்பிடி படகு தீப்பிடித்து எரிந்ததையடுத்து மீனவர்கள் உடனடியாக மற்றைய படகுகளில் இருந்து தீப்பிடித்து எரிந்த படகை  அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், அந்தப்  படகிலிருந்தஅனைத்து மீன்பிடி  உபகரணங்கள் ஏற்கனவே தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.

மீன்பிடி படகில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மீனவர்கள் கருதுகின்றனர்.

IMG 20241021 WA0021

இச்சம்பவம் தொடர்பாக மீன்பிடி படகின் உரிமையாளர் கந்தர பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்துக்குச் சொந்தமான பல நாள் படகு ஒன்று இன்று (21) காலை தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ பரவியதால் மேலும் இரண்டு சிறிய படகுகள் சேதமடைந்துள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், இந்த படகுகள் தீயினால் ஏற்பட்ட இழப்புக்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை மற்றும் கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...