Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

கோட்டாகோகம கூடாரங்கள் அகற்றப்படுவதற்கு இடைக்கால தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்கள் வாபஸ்

T

The Leader Desk

ஆகஸ்ட் 10, 2022 • 12:47 PM

கோட்டாகோகம கூடாரங்கள் அகற்றப்படுவதற்கு இடைக்கால தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்கள் வாபஸ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சோபித ராஜகருணா, தம்மிக கனேபொல ஆகிய மேன்முறையீட்டு நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
  • அதற்கமைய, குறித்த மனுக்களை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், ஆரம்பத்திலேயே மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 05 ஆம் திகதி மாலை 05 மணிக்கு முன்னர் போராட்டக்களத்திலிருந்து வௌியேறுமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
எழுத்து அளவு:

சோபித ராஜகருணா, தம்மிக கனேபொல ஆகிய மேன்முறையீட்டு நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

தமது சேவை பெறுநர்கள், காலி முகத்திடலிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக, மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனால் குறித்த மனுக்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான அவசியம் இல்லை என தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணிகள், சட்டரீதியான உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மனுக்களை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்குமாரு கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கைக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை என கோட்டை பொலிஸார் சார்பில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தனவும், நகர அபிவிருத்தி அதிகார சபை சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும் மன்றுக்கு அறிவித்தனர்.

அதற்கமைய, குறித்த மனுக்களை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், ஆரம்பத்திலேயே மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 05 ஆம் திகதி மாலை 05 மணிக்கு முன்னர் போராட்டக்களத்திலிருந்து வௌியேறுமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவ்வாறான அறிவித்தலை விடுப்பதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை என தெரிவித்த மனுதாரர்கள், குறித்த அறிவித்தலை வலுவிழக்கச் செய்வதற்கான எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

மீகஹவத்த காஷியப்ப தேரர், இரேஷ் அல்போன்ஸ், அசங்க அபேரத்ன மற்றும் லஹிரு அன்ரன் மதுஷான் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...