Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

சுயேட்சை எம்.பிக்கள் குழுவிலிருந்து 4 இராஜாங்க அமைச்சர்கள்!

T

The Leader Desk

ஏப்ரல் 18, 2022 • 4:48 PM

சுயேட்சை எம்.பிக்கள் குழுவிலிருந்து 4 இராஜாங்க அமைச்சர்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கல்வி, சேவைகள் மற்றும் சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சராக சுரேன் ராகவன் இன்று பதவியேற்றார்.
  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சுப் பதவியை கடந்த வாரம் ஏற்றுக்கொண்டார். சுயேட்சை எம்.பி.க்கள் குழுவில் இருந்து மொத்தம் 4 எம்.பி.க்கள் தற்போது மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துள்ளனர்.
  • தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
எழுத்து அளவு:

தற்போதைய அரசாங்கத்திலிருந்து விலகி சுயேட்சையாக செயற்படுவதாக அறிவித்திருந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 கட்சிகளின் 42 எம்.பி.க்கள் குழுவில் அவரும் ஒருவர். 

வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 11 அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயேட்சையாக செயற்பட போவதாக பாராளுமன்றில் அறிவித்தனர்.

 எனினும், ஜனநாயக இடதுசாரி முன்னணியைச் சேர்ந்த கயாஷான் நாவானந்த சுகாதார இராஜாங்க அமைச்சராக இன்று பதவியேற்றார். 

இதேவேளை, அரசாங்கத்தில் இருந்து விலகிய 42 எம்.பி.க்கள் குழு தற்போது 38 நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் குறைந்துள்ளதுடன், நான்கு எம்.பி.க்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

கயாஷான் நாவானந்தவுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்னவும் இராஜாங்க அமைச்சு ஒன்றை ஏற்றுக்கொண்டார்.

 கல்வி, சேவைகள் மற்றும் சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சராக சுரேன் ராகவன் இன்று பதவியேற்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சுப் பதவியை கடந்த வாரம் ஏற்றுக்கொண்டார். 

சுயேட்சை எம்.பி.க்கள் குழுவில் இருந்து மொத்தம் 4 எம்.பி.க்கள் தற்போது மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துள்ளனர்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...