ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவா் ரவூப் ஹக்கீமை கட்சித்தலைவா் பதவியிலிருந்து அகற்றி புதிய தலைவா் ஒருவரை கொண்டுவருவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இரகசிய முன்னெடுப்புகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இருவா், மாகாண முன்னாள் உறுப்பினா்கள் சிலரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதற்கான இரகசியப் பேச்சுகள் சில தினங்களுக்கு முன்னா் கிழக்கு மாகாணத்தின் பிரசித்தி பெற்ற நகா் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சித்தலைவரின் செயற்பாடுகள், கட்சியின் கட்டுக்கோப்பினை மீறி செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை, , முதலமைச்சா் வேட்பாளராக நியமிப்பது தொடர்பான கட்சியின் உத்தேசம் உட்பட்ட விடயங்களை முன்வைத்து அவருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி