தேர்தல் விகிதாசார முறையில் நடக்கும் என்ற உடன்பாடு ஒரு தற்காலிக ஏற்பாடாகும், இப்போது பழைய முறையில் தேர்தல்கள் நடத்தப்படலாம் என்ற உடன்பாடு அரசு - எதிரணி மத்தியில் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எனவே தேர்தல் முறைமை சீர்திருத்த பணிகள் தொடரும், அடுத்த தெரிவுக்குழு கூட்டம் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் முறை தற்போது பேசப்படும் ஒரு தலைப்பு. மாகாணசபை தேர்தலை விகிதாசார முறையில் நடத்த இப்போது அரசு இணங்கியுள்ளது.

இப்போது தேர்தல் முறையை மாற்றப் போனால் பெரும் தாமதம் ஏற்படும். இதில் நாம் உறுதியாக இருந்தோம்.

ஆகவே, தெரிவுக்குழுவில், அரசு-எதிரணி மத்தியில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணம் அரசாங்கத்தின் மீதான உள்நாட்டு, சர்வதேச அழுத்தங்கள் ஆகும். ஆகவே இது இடைக்கால உடன்பாடுதான்.

ஆகவே தேர்தல் உள்ளூராட்சி, மாகாணசபை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தல் முறைமைகள் பற்றிய அவதானம் தொடர்ந்து தேவை.

“விகிதாசார முறைமை வேண்டாம்”, “தொகுதி முறையே வேண்டும்” என தெரிவுக்குழுவில் பெரும்பான்மை, குறிப்பாக அரசாங்க கட்சி அரசியல்வாதிகள் கூப்பாடு போட்டார்கள்.

அது இந்நாட்டில் சிதறி வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் நாடாளுமன்ற, மாகாணசபை பிரதிநிதித்துவங்களை அபாயத்துக்குள் தள்ளும் நோக்கத்தைக் கொண்டதால், நாம் இந்நிலைப்பாட்டை எதிர்த்தோம்.

விகிதாசார முறைமை மாற்றப்படக்கூடாது என்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) உட்பட்ட பெரும்பான்மை கட்சிகளும் ஆதரவளித்தார்கள்.

அதேவேளை அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான சிறிலங்கா சுதந்திர கட்சி உட்பட்ட பல கட்சிகளின் தலைவர்களுடனும் நான் இது தொடர்பில் பேச்சுகள் நடத்தி இருந்தேன்.

அவர்களும் அரசாங்கத்துக்கு உள்ளே அழுத்தங்களைப் பிரயோகித்தார்கள். நாடாளுமன்றமும், மாகாணசபைகளும் தேசிய, மாகாண சட்ட மூலங்களை விவாதிக்கும் நிறுவனங்களாகும்.

ஆகவே இங்கே உள்ளூர் தேர்தல் தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களின் அவசியம் கிடையாது.

ஆனால், நீர், மின்சாரம், வீதிகள் உட்பட மக்களின் நாளாந்த விவகாரங்களைக் கையாளும் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற வட்டார உறுப்பினர்களாக இருக்கலாம். உள்ளூராட்சி மன்றங்களில், அவ்வந்த மன்றங்களின் வட்டாரங்களுக்குப் பொறுப்பு கூறக்கூடிய உறுப்பினர்களுக்கான அவசியம் இருக்கின்றது.

ஆகவே நாடாளுமன்றம் , மாகாணசபைகளுக்குத் தொகுதி முறை தேவையில்லை என நாம் கூறினோம். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தொகுதி (வட்டார) உறுப்பினர்கள் இருக்கலாம் எனவும் நாம் கூறினோம்.

அதேபோல்தான், விருப்பு வாக்கு என்பது ஜனநாயகத்தின் உச்சக் கட்டம். கட்சிக்கு வாக்களிக்கும் ஒரு வாக்காளர், அந்த கட்சித் தலைமை முன் நிறுத்தும் வேட்பாளருக்கு மட்டும்தான் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து, விருப்பு வாக்கு மூலம் தப்புகிறார்.

கட்சிக்கு வாக்களிக்கும் அதேவேளை தனக்குப் பிடித்த வேட்பாளரைத் தெரிவு செய்ய ஒவ்வொரு வாக்காளருக்கும் “ஜனநாயக சுதந்திரத்தை”, விருப்பு வாக்கு வழங்குகிறது. இதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

“விருப்பு வாக்கு வேண்டாம்”, “விகிதாசார முறைமை வேண்டாம்”, “தொகுதி முறைக்கு போவோம்” என்ற கோஷங்கள் பெரும்பான்மை இன பெரிய கட்சிகளின் கோஷங்கள்தான்.

அதேவேளை தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் கூட, இவைபற்றிய தெளிவு இல்லாமல், “விருப்பு வாக்கு வேண்டாம்”, “தொகுதி முறைக்குப் போவோம்” என்ற கோஷங்களை ஆங்காங்கே எழுப்பினார்கள்.

இது முதிர்ச்சியற்ற பிழையாகும். தேர்தல் முறை விவாதம் தொடரும். இவை பற்றிய அவதானத்துடன் தமிழ், முஸ்லிம் கட்சிகள் செயற்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி