வருவேன், முன்னை விட ஆளுமையுடன், பலத்துடன், கோபத்துடன் வருவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

தனது முகப்புத்தக பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும்,

அவசரத்தில் வாசித்து, தடுப்பூசியை "விழுங்கி" விடாதீர்கள்! கண்டால் வரச்சொல்லுங்க அந்த அமைச்சரை! (யார் அவர்?)

என் காலத்தில் பேராசிரியர் சந்திரசேகரனை "அரசகரும மொழிகள் ஆணைக்குழு" தலைவராக நியமித்து, அங்கே ஒரு தொடர்பாடல் நிலையத்தையும் அமைத்திருந்தேன்.

என் கவனத்துக்கு வந்த உடன் ஓடியோடி திருத்தங்கள் செய்யப்பட்டன. அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன.

எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டில் எந்த மூலையில் மொழிப்பிழை நடந்தாலும், (முதல் பொறுப்பு கூற வேண்டிய அந்த ஊர் எம்.பியை விட்டு விட்டு...) நாடாளுமன்றத்திலும், ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும், மேடைகளிலும், பதில் சொல்லவும், ஏச்சு-பேச்சு வாங்கவும் ஒரு "அப்பாவி" அமைச்சர் இருந்தார்.

வெயில் நன்றாக அடிக்க, அடிக்கத்தான் நிழலின் அருமை தெரியும். அடிக்கட்டும்.! தெரியட்டும்.! எழுதி வைத்துக் கொள்ளுங்கள். வருவோம்.! வருவேன்.! முன்னை விட ஆளுமையுடன், பலத்துடன், கோபத்துடன் வருவேன்..! என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி நிலையமொன்றில் உள்ள எழுத்துப் பிழையுடனான பதாகையின் புகைப்படத்தை இணைத்து அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி