1200 x 80 DMirror

 
 

அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப் போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கன மழைக்கு இதுவரை குறைந்தபட்சம் 15 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூயிசியானாவில் இடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது.

லூயிசியானா, மிஸ்ஸிசிப்பியில் சூறாவளி இடா ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா கருதப்படுகிறது.

சூறாவளி பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள், ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட சிறிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் வரலாறு காணாத புயலில் சிக்கிய தமிழர்களின் அனுபவம்

அசாம் வெள்ளம்: காணுமிடமெல்லாம் தண்ணீரும், மக்களின் கண்ணீரும் - வடகிழக்கின் பெருந்துயர்

நியூயார்க் நகரில் சுரங்கப்பாதைக்குள் கன மழை கொட்டும் காட்சியும், அதற்கு மத்தியிலும் இயக்கப்பட்ட கடைசி ரயில் சேவை வந்து போகும் காணொளியை உள்ளூர் மக்கள் பகிர்ந்துள்ளனர்.

மற்றொரு காணொளியில் சாலையில் இருந்து கரை புரண்டோடும் வெள்ளம் சுரங்க ரயில் நிலையத்துக்குள் வேகமாக ஓடும் காட்சி இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், நியூயார்க் நகரின் ப்ரூள்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளிலும் வெளியிடங்களிலும் மக்கள் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணிகளை உள்ளூர் நிர்வாகங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

செயற்கைகோள் படங்கள்

தெற்கு லூயிசியானாவை புரட்டிப் போட்ட இடா சூறாவளி

நியூயார்க் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நகர மேயர் பில் டி பிளாசியோ, வரலாறு காணாத வானிலையை நியூயார்க் அனுபவித்து வருகிறது. கொடூரமான வகையில் ஓடும் வெள்ளத்தால் நகர சாலைகள் படுபயங்கர நிலையில் உள்ளன என்று கூறியுள்ளார்.

நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை, வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள ரயில் நிலையங்கள். தண்டவாளங்கள் தொடர்பான படங்களை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ, "ஒருவேளை பொதுமக்கள் வெளியே சென்றிருந்தால், சுரங்க பாதைகள், சாலைகளில் செல்வதை தவிருங்கள். வெள்ளம் ஓடும் சாலைகளில் பயணம் செய்யாதீர்கள்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கடைசியாக வந்த தகவலின்படி, நியூயார்க், கனெக்டிகட், நியூ ஜெர்சி ஆகியவற்றின் குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இடா சூறாவளி

கல்லியோனா பகுதியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

அங்கு இன்று காலை உள்ளூர் நேரம் 8.22 மணிப்படி, 40,551 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

நியூ ஜெர்சியில் 60 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சஸ்ஸெக்ஸ், வார்ரென், ஹன்டெர்டன் கவுன்டி போன்ற பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

கனெக்டிகட்டில் 17,302 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக அசம்பாவிதத்தை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

நியூ ஜெர்சி

நியூஜெர்சி நகரில் வீடுகளை விட்டு வெளியே செல்பவர்கள், காலைகளை மறைக்கும் பிளாஸ்டிக் உறைகளை முன்னெச்சரிக்கையாக அணிந்து கொண்டு நடப்பதை காண முடிகிறது.

முன்னதாக, நியூயார்க், நியூ ஜெர்சியை தாக்கும் முன்பாக நியூ ஓர்லியான்ஸ் பகுதியில் பலத்த சேதத்தை இடா சூறாவளி ஏற்படுத்தியிருந்தது.

அங்கு வீசிய கடுமையான காற்றால் கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளும் கவிழ்ந்தன.

நியூ ஓர்லியான்ஸ் பகுதியில் இதுபோன்ற வேகத்தில் சூறாவளி வருவது கடந்த 16 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 2005இல் வீசிய கேத்ரினா சூறாவளியின்போது அங்கு 1,800 பேர் பலியானார்கள்.

நியூ ஓர்லியான்ஸ்

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி