இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர் வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவத்தில், குறித்த காட்சிகளில் தோன்றிய இளைஞன் மற்றும் யுவதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி.யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் சிறப்புக்குழு அவர்களை நேற்று மாலை கைது செய்தனர். மஹரகமை பகுதியைச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவரும் எல்பிட்டியவை சேர்ந்த தற்போது பன்னிப்பிட்டிய பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் 25 வயது யுவதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும், ஆபாச காட்சிகளை எடுத்து இணையத்தில் பதிவேற்றுவதை தமது தொழிலாக செய்து வந்துள்ளதாக விசாரணையாளர்கள் கூறினர்

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பஹன் துடாவ நீர் வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதனருகே ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில், அந்த ஆபாச வீடியோவை உடனடியாக நீக்குமாறு அதனை பதிவேற்றிய இணையத் தளத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் ஊடாக இதற்கான அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

இவ்வாறான ஆபாச காணொளிகளை வைத்திருப்பது, அதனை பகிர்வது இலங்கையின் தண்டனை சட்டக் கோவையின் கீழ் குற்றமாகும் என எச்சரித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, குறித்த ஆபாச காணொளி தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக கூறினார்.

‘ தம்சக் மன்றம் ‘ எனும் அமைப்பின் தலைவர் பஸ்ஸரமுல்லே தயாவங்ச தேரர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் எழுத்து மூலம் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை கோரிய பின்னணியிலேயே இந்த ஆபாச காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா பிரயாணிகளை அதிகம் கவர்ந்த இடங்களில் இளம் ஜோடி ஒன்று, இவ்வாறு ஆபாச காட்சிகளை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளமையானது இலங்கையின் கலாசார விழுமியங்கள் தொடர்பில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ள பஸ்ஸரமுல்லே தயாவங்ச தேரர், குறித்த ஜோடி இதற்கு முன்னரும் சுற்றுலா தளமான மீ முரே பகுதியிலும் இவாறு ஆபாச காணொளி தயரித்து பணம் சம்பாதிக்க இணையத்தில் பதிவேற்றியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் இது தொடர்பில் உடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு குறித்த தேரர் கோரியிருந்தார்.

 120361457 mediaitem120361454

இந்நிலையிலேயே இது தொடர்பில் குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் சிறப்புக் குழு இவ்விவகாரத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இரத்தினபுரி பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக, குறித்த ஆபாச காட்சியில்வரும் இடம் தமது அதிகார எல்லைக்கு உட்பட்ட, பலாங்கொடை , பெலிஹுல் ஓயாவிலிருந்து 1.5 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர் வீழ்ச்சி பகுதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஸ்தல விசாரணை பதிவுகளுக்காக சிஐடியின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் குழுவொன்று அந்த நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று அவதானிப்புக்களை முன்னெடுத்துள்ளது.

இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் குறித்த ஆபாச காணொளியை பெண் ஒருவரே இணையத்தில் பதிவேற்றியுள்ளமை தெரிய வந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி