இன்று நாட்டில் இதுவரை இல்லை அல்லது முடியாது என்பதை தவிர வேறு எதையாவது நாம் கேட்டிருக்கின்றோமா? ஆகவே இந்த அரசாங்கத்திற்கு இன்று இல்லை மற்றும் முடியாது என்பதை தவிர வேறு எதையுமே செய்ய முடியவில்லை என்பது தெளிவாக பார்க்கக்கூடியதாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அமைச்சர் ஒருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வெளியே வந்து இது அனைத்திற்கும் எதிர்க்கட்சியினர் தான் காரணம் என்று கூறியிருந்தார், நகைச்சுவையாக உள்ளது.

நாங்களா சரியான நேரத்திற்கு தடுப்பூசிகளை கொண்டுவராமல் இருந்தோம், நாங்கள சரியான தேரத்திற்கு நாட்டை முடக்கலாம் இருந்தோம்? ஆர்ப்பாட்டங்கள் தான் இதற்க்கு காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார், இந்த இடத்தில தெளிவாக ஒரு விடயத்தை கூறவேண்டும், கோவிட் பிரச்சினையின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியினர் தனி தனியாக அவதானத்தோடு செயற்பட்டோம், நாம் என்றும் கட்சி ஆதரவாளர்களை அழைக்கவில்லை. நாங்கள் மக்களுக்காகவே தனியாக வீதிக்கு இறங்கி போராடினோம்.

ஆகவே அந்த அமைச்சருக்கு நான் கூறிக்கொள்கிறேன் உங்களுடைய தவறுகளை மறைக்க ஒருவருக்கொருவர் விரல் நீட்டுவதை இனியாவது தவிர்த்து கொள்ளுங்கள்.

ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு கேட்டபோது நீங்கள் செவி சாய்த்தீர்களா? அவர்களது கருத்துக்களை கேட்டீர்களா? அவர்களுடன் கலந்துரையாடினீர்களா? எதுவும் இல்லை இதனால் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தில் பெரியவர் முதல் அனைவருமே தோல்வியடைந்து விட்டனர். இன்று யாராவது ஒருவர் அரசாங்கத்திற்கு எதிராக விமர்சித்து பேசினால் மறுநாள் அவர் குற்ற புலனாய்வு பிரிவிவில் இருக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கருத்து வெளியிட்ட ஷெஹான் என்ற சகோதரர் எட்டாவது நாளாகவும் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அவர்களை விசாரணை செய்து அவர்கள் வாய்மூலமாக எம்மை பற்றி ஏதாவது தகவல் பெற்று, எம்மை கைது செய்யவே இவர்கள் முயற்சிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி