தேவை ஏற்பட்டால் கட்சி தாவுவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதி ஒருவருக்கு மிகவும் முக்கியமானது அரசியல் கட்சி கிடையாது எனவும் அரசியல் கொள்கைகளே முதனிலையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தக் கட்சியை சேர்ந்தவர் என்பதனை விடவும் அரசியல்வாதியின் அரசியல் கொள்கைகளே முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசியம் என கருதினால் தாம் இன்னொரு கட்சிக்கு தாவ நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் காலத்திற்கு காலம் காலம் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்தாலும் தமது சோசலிச கொள்கைகளை மாற்றிக் கொண்டதில்லை என அவர் சுட்டிடக்காட்டியுள்ளார்.

தாம் சுகாதார அமைச்சர் பதவி வகித்த காலத்திலேயே சேலைன் உற்பத்தி நிறுவனத்தை ஸ்தாபித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் வேறு ஒருவரின் குழந்தைக்கு உரிமை கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி