அரசாங்க உள் வட்டாரங்களின்படி, பல ஆளுனர்களின் பதவிகள் அல்லது மாகாணங்கள் மாறக்கூடும் என அறியக்கிடைக்கின்றது.

இது தொடர்பாக உயர் மட்ட அரசாங்க கலந்துரையாடல் நடந்திருப்பதாக அரசு சார்பு லங்கா சீ நியூஸ் தெரிவித்துள்ளது.

அரசாங்க வட்டாரங்களின்படி, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நெருங்கிய கூட்டாளியான வில்லி கமகே, தென் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார்.

வெற்றிடத்தை நிரப்ப மற்றொரு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவை, நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அவர் கடந்த பொதுத் தேர்தலில் மொட்டு கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரும் பசில் ராஜபக்ஷவின் மற்றொரு கூட்டாளியாவார்.

தோற்கடிக்கப்பட்ட இத்தகைய வேட்பாளர்களுக்கு அரசாங்க பதவிகளை வழங்க வேண்டாம் என்று ஜனாதிபதி முன்னர் முடிவு செய்திருந்தாலும், வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களை இலக்காகக் கொண்ட பல அனுபவமுள்ள அரசியல் பிரமுகர்களுக்கு ஆளுநர் பதவிகளை வழங்க ராஜபக்ஷ குடும்பம் முடிவு செய்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி