இலவச கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்ட மூலத்தை உடனடியாக நீக்கக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கொத்தலாவல சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது அமைப்புக்கள், ஆசிரியர் சங்கங்கள் ஆகியவற்றால் நாடு பூராகவும் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு வலுசேர்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்திலும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி