சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பிரபல நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வீடு ஒன்று வழங்குவதாக பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தமக்கு காணப்படும் மூன்று வீடுகளில் ஒன்றை ரஞ்சனுக்கு தாம் வழங்குவதாக சந்திமால் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் தங்கியிருந்த மாதிவலவில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து பொருட்களை அகற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் எதிர்வரும் 20ம் திகதியுடன் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால் தமது மூன்று வீடுகளில் ஒன்றை ரஞ்சனுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக இன்றைய தினம் முகநூலில் இன்று சந்திமால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் தமது நெருங்கிய நண்பர் எனவும் ஆபத்தான நேரத்தில் நண்பனுக்கு உதவுவதே சாலச் சிறந்தது எனவும் சந்திமால் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க சிறையிலிருந்து மீண்டு வந்ததும் இந்த வீட்டிலிருந்து தனது பணிகளை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி