நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (ஜூலை 14) ஏழு நாடுகளின் தூதர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர் அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதர்களையும், இராஜதந்திர பணியாளர்களையும் ​சந்தித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல்களின் போது இலங்கையை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாக தூதர்கள் தெரிவித்ததாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் வெளியுறவுக் கொள்கையை முன்னெடுப்பது மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் உலகின் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக பசில் ராஜபக்ஷ வெளிநாட்டு தூதர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சர்வதேச உறவுகள் சீனாவோடு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையிலும், கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் இலங்கை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையிலும் சர்வதேச உறவுகளை மீண்டும் வலுப்படுத்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவசரமாக தலையிட்டுள்ளார்.

BRR12BRR3

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி