அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பொருட்களின் விலையைக் குறைக்கக்கோரி வடக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும்,பொலிசார் குளப்பம் விலைவித்துள்ளனர்.'புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட்-லெனினிச கட்சி' கடந்த வார இறுதியில் யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு முன்னால் முகக்கவசம் அனிந்து சமூக இடைவெளிபேனி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கவும், தொற்றுநோய் சட்டங்களைப் பயன்படுத்துவதற்கான ஜனநாயக விரோத நடைமுறையை நிறுத்தவும் எனக்கூறி போராட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தனர், மேலும் நாட்டில் உள்ள அனைவருக்கும் உடனடியாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் கோரினர்.

02

அண்மையில் எரிபொருள் விலை அதிகரித்ததால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை அரசாங்கம் உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தின் போது சம்பவ இடத்திற்கு வந்த ஒரு பொலிஸ் அதிகாரி நாட்டில் தொற்றுநோய் இருப்பதால் போராட்டத்தை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டதாக மாகாண ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அமைப்பாளர்களுக்கு தங்கள் கருத்துக்களை கூற சிரிது நேரம் அவகாசம் வழங்கியதாக மாகாண நிருபர்கள் மேலும் தெரிவித்தனர்.

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி