கொவிட் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியாக ஒரு மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் பேரினது தகவல்களை, கணினியல் பதிவதற்காக சுகாதாரத் துறை இராணுவத்திற்கு வழங்காமையால் அந்த நபர்களின் தரவுகளில் பிரச்சினை தோன்றியுள்ளதாக இராணுத் தளபதி சுகாதாரத் துறையை குற்றஞ்சாட்டியுள்ளார்.

முதலாவது தடுப்பூசி திட்டத்தில் பெரும்பாலும் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தனது தனிப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இன்று (14) கூறியுள்ளார்.

இந்த தடுப்பூசி திட்டத்தை இராணுவம் ஆரம்பித்த முதாலாவது நாளிலிருந்து தரவுகள் கணினியில் பதிவு செய்யப்பட்டதோடு, அந்த தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாகவும் சரியனதாகவும் இருப்பதாகவும் கூறியுள்ள இராணுவத் தளபதி,   தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களின் தகவல்களை சுகாதாரத்துறை புத்தகங்களில் எழுதிக் கொண்டுள்ளதால் சில தரவுகள் தெளிவில்லாமல் இருப்பதாகவும், இதனால் பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும்  கூறியுள்ளார்.

அந்த தரவுகளை பெற்றுக் கொள்ள சென்ற வேளையில் சில சுகாதார அதிகாரிகள் நிராகரித்தமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி