அமெரிக்கவின் புளோரிடா மாகாணத்தில் இந்த ஆண்டு அதிகளவிலான கடற்பசுக்கள் பட்டினியால் இறந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புளோரிடா அருகில் உள்ள கடற்பகுதியில் கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 2 வரை குறைந்தது 841 கடற்பசுக்கள் இறந்துள்ளன.

இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு நச்சு பாசி காரணமாக 830 கடற்பசுக்கள் இறந்ததே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

கடற்பசுக்கள் உணவுக்காக நம்பியிருக்கும் கடலடியில் உள்ள புற்கள், கடல் மாசு காரணமாக அழிந்து வருகிறது என உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புளோரிடாவின் கடற்கரைகளில் அதிகரித்து வரும் கழிவு மாசுபாடுதான் முக்கிய பிரச்சினை என்று அவர்கள் கூறுகிறார்கள். இதனால், கடலடியில் உள்ள புற்கள் வேகமாக அழிந்து வருகின்றன.

சென்னை கடற்கரையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காரணம் என்ன?

கொத்து கொத்தாக இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் - மன்னார் வளைகுடாவில் நடந்தது என்ன?

பெரும்பாலான மரணங்கள் குளிர் கால மாதங்கள் ஏற்படுகின்றன என்றும், கடற்பசுக்கள் உணவு தேடி இந்தியன் நதி லகூனுக்கு இடம்பெயர்ந்து சென்ற போது அங்கு பெரும்பாலான கடலடி புற்கள் அழிந்திருந்தன என்றும் புளோரிடாவின் மீன் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா

வெப்பம் அதிகரித்து வருவதால், அட்லாண்டிக் கடற்கரையில் கடற்பசுக்கள் இடம்பெயர்ந்து செல்கின்றன. இதன் காரணமாகக் கடந்த மாதம் அதிகளவிலான உயிரினங்கள் படகு மோதி இறந்துள்ளது என தரவுகள் கூறுகின்றன.

இந்த ஆண்டில் இதுவரை 63 கடற்பசுக்கள் படகு மோதி இறந்துள்ளன. படகுகள் மோதுவது இந்த கடல் வாழ் உயிரினங்களுக்கு ஒரு முக்கிய ஆபத்தாக உள்ளதாக ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

கடற்பசுக்களை அச்சுறுத்தலில் இருக்கும் உயிரினமாகக் கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க அறிவித்தது. ஆனால், இதனைப் பாதுகாக்கத் தீவிர நடவடிக்கை தேவை என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

புளோரிடா கடலில் கிட்டதட்ட 6,300 கடற்பசுக்கள் வாழுவதாக அரசு கூறுகிறது. சமீபத்திய மாதங்களில், புளோரிடாவில் உள்ள கடல் உயிரியலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கடற்பசுக்கள் இறப்பது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி