முத்துராஜவெல சதுப்பு நிலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் பாரிய கட்டட நிர்மாண நடவடிக்கைகள் மற்றும் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை எதிர்வரும் 26 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் (12) தீர்மானித்துள்ளது.

சோபித்த ராஜகருணா, தம்மிக்க கனேபொல உள்ளிட்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம், சட்டமா அதிபர் உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி