கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு முரணாகுமெனவும், அத்தகைய ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் எதிர்காலத்திலும் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் பீற்றிக்கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு இந்த ஆர்ப்பாட்டம் கன்னத்தில் அறைந்ததைப் போன்றதாகுமென பேசப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (09) டொரிங்டன் சதுக்கத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் ராஜாங்க அமைச்சருக்கு கன்னத்தில் அறைந்ததைப் போன்றதாகுமென அரசியல் ஆய்வாளர்களின் பேசிக் கொள்கின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குமுறை செய்வதற்கு பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் தொடர்ப்பில் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்குப் பதிலளித்து ராஜாங்க அமைச்சர், அடக்குமுறையை நியாயப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்வோர் எதிர்காலத்திலும் கைது செய்யப்படுவார்களெனக் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது அங்கு வந்த பொலிஸார், வழமை போன்று, சட்ட விரோதமான ஒன்றுகூடலை நிறுத்துமாறும், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேரிடுமெனவும் கூறினர். என்றாலும் எந்தவொரு ஆர்ப்பாட்டக்காரரும் கைது செய்யப்படவோ, வலுக்கட்டாயமாக பஸ்ஸில் ஏற்றப்படவோ இல்லை. சரத் வீரசேகர சொன்னபடி செய்யாத பொலிஸார் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக் சல்யூட் அடித்ததை காணக்கூடியதாக இருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும், அரசியல் அதிகாரத்திற்கும் அடிபணியும் பொலிஸார், மக்கள் பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாஙம் கவனம் செலுத்தாத போது வீதியிலிறங்கி போராடுபவர்களை அடக்குமுறை செய்யத் தயங்குவதில்லை என்பதும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டளை அதுதானெனவும் அரசியல் துறைகளில் பேசப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி