சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 7 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் தேவை கருதி இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கே.ஜயலத் வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.எஸ்.கொடித்துவக்கு சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகவும் ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான மேலதிக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக M.D.R.S.தமிந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க பொலிஸ் நிர்வாக பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க, சமூக பொலிஸ் சேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு பொறுப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.

இதனிடையே, பிரதி பொலிஸ்மா அதிபர் A.A.N.L விஜேசேன மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலிருந்து அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி