தமிழ் சினிமாவில் பல புதுமைகளை, தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அதில் வெற்றியும் கண்டவர் கமலஹாசன். உலக நாயகன் என ரசிகர்களாலும்,  திரையுலகினராலும் புகழப்படுபவர் கமல். அப்படிப்பட்ட கமலின் ஓவியத்தை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த மாணவி நேஹா பாத்திமா.கோடுகள், புள்ளிகள், வளைவுகள் என எதையும் பயன்படுத்தாமல் இந்த ஓவியத்தை அவர் வரைந்துள்ளார்.

தென்னிந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்த நேஹா பாத்திமா என்பவர், கமலின் மிகப் பெரிய stencil word art ஓவியத்தை உருவாக்கி உள்ளார். கமலஹாசன் என்ற வார்த்தையை மட்டும் வைத்து, வெறும் இரண்டரை மணி நேரத்தில் இந்த ஓவியத்தை அவர் உருவாக்கி உள்ளார்.

இந்த சாதனை அமெரிக்க சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கமல், அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.பாத்திமாவை பேர் சொல்லும் பிள்ளை என குறிப்பிட்டு புகழ்ந்துள்ளார். கோழிக்கோடு பாத்திமா., புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத் தோற்றத்தை வரைந்திருக்கிறார். இந்திய,ஆசிய,அமெரிக்க,சர்வதேச சாதனைப் புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றிருக்கிறார். ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்பது இதுதானா! என கமல் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி