கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் படையினரை பயன்படுத்துவது குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்துக்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தனது நாடாளுமன்ற உரையில் இராணுவதளபதியை விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

2002 இல் உயர் பாதுகாப்பு வலயங்களை மூடிவிடுமாறு ரணில் விக்கிரமசிங்க எனக்கு உத்தரவிட்டார். நான் இது குறித்து அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த சந்திரிகா குமாரதுங்கவிடம் முறைப்பாடு செய்தேன் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சில சிஐடி உத்தியோகத்தர்கள் அசேல சம்பத்தினை கைதுசெய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எங்கள் எதிர்கால அரசாங்கத்தில் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பை நோக்கிய கவனம் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்போம் என தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இது வரை இந்த விடயத்தில் திருப்தியளிக்ககூடிய முன்னேற்றத்தை காண்பிக்கவில்லை என சரத் பொன்சேகா. பாதுகாப்பு படையினரை வலுப்படுத்துவதற்காக சீர்திருத்த முயற்சிகள் இடம்பெற்றுள்ளன என அரசாங்கம் தெரிவிப்பதையும் அவர் நிராகரித்துள்ளார்.

இதுவரை அவ்வாறான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை அச்சுறுத்தல்கள் இன்னமும் தொடர்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் கப்பல்கள் தீப்பிடிக்கும் விடயங்கள் திட்டமிடப்பட்டவை போல தோன்றுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மீன்பிடி சமூகத்திற்கான இழப்பீட்டு தொகை குறித்து தெரிவிக்கின்ற போதிலும் அதனை எவ்வாறு பொதுமக்களிற்கு வழங்கவுள்ளதாக எதனையும் தெரிவிக்கவில்லை என சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். எக்ஸ்பிரஸ்பேர்ள் கப்பலிற்கு அதிகாரிகளே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி