தமது தந்தையின் கொலையில் குற்றவாளியான துமிந்த சில்வா விடுதலையானதைத் தொடர்ந்து தனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர அச்சம் வெளியிட்டுள்ளார்.

தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை நீதிக்கு கொண்டு வருவதற்காக தாமும் தமது குடும்பத்தினரும் நீண்ட சட்டப்போரில் ஈடுபட்டதாக பிரேமச்சந்திர சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.

தமது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை நீதிக்கு கொண்டுவருவதற்காக நீண்ட சட்டப் போரை நடத்தப்பட்டது. இப்போது இலங்கையின் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் மக்கள் இப்போது நீதித்துறை முறையை எவ்வாறு நம்பலாம்? என்று ஹிருனிகா கேள்வி எழுப்பியுள்ளார். எனவே தமது பாதுகாப்பு குறித்து தாம் அச்சப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2011 ல் நடந்த உள்ளூர் தேர்தலின் போது பாரத லட்சுமன் பிரேமச்சந்திர மற்றும் அவரது மூன்று ஆதரவாளர்களை சுட்டுக் கொன்றதாக சுமத்தப்பட்ட வழக்கில் துமிந்த சில்வா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

எனினும் சில்வாவுக்கு இந்த வாரம் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில், மக்கள் அடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள்.

இந்தநிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்களை நரகத்துக்கு இழுத்துச் செல்வதாக கூறி அவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி