முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ 6 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.

சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள் வட்டாரங்களின்படி அவருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வழங்கப்படவிருக்கின்றது. அதனுடன் இணைந்ததாக நகர அபிவிருத்தி,முதலீட்டு ஊக்குவிப்பும் வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சார்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு புதிய அமைச்சகம் நிறுவப்படும் என்று கூறப்படுகிறது.

சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்து உறுப்பினர்கள் தங்கள் ஆசனங்களை கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த வீரசிங்க, சாகர காரியவசம், ஜயந்த கெதகொட, மர்ஜான் பலீல் மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரா ஆகியோர் இதில் உள்ளனர்.

வாழ்க்கை செலவு குழு எரிபொருள் விலையை உயர்த்தியது. இதற்கு பசில் ராஜபக்ஷவின் ஒப்புதலுடன் சிறீ லங்கா பொதுஜன பெரமுனவ கடும் ஆட்சேபனைகளை எழுப்பியதோடு, பசில் ராஜபக்ஷ அமைச்சரானவுடன் விலை மீண்டும் குறையும் என்று கட்சி ஆதரவாலர்கள் நம்புகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி