அரசாங்கத்தின் எதிரிகள் அரசாங்கத்திற்கு வெளியில் இல்லை, அவர்கள் அரசாங்கத்திற்குள் எம்முடனே உள்ளனர் என்பது வெளிப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில் என்னை சாட்டாக வைத்துக்கொண்டு ஜனாதிபதியையும், பிரதமரையுமே இவர்கள் தாக்குகின்றனர் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எரிபொருள் விலை உயர்வு அரசாங்கத்தின் தீர்மானம் எனவும், ஜனாதிபதியும் பிரதமருமே இந்த தீர்மானத்தை எடுத்தனர் எனவும் தெரிவித்தும், ஜனாதிபதி செயலகம் இதற்கான விளக்கத்தை கொடுத்தும் தொடர்ச்சியாக விமர்சிக்கின்றனர்.

என்றால் இது எனக்கு எதிரான தாக்குதல் அல்ல, மாறாக என்னை சாட்டாக வைத்துக்கொண்டு ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமே தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு என்ன காரணம் என்பதை அவர்களே கூறியாக வேண்டும். 

வரலாற்றில் எந்தவொரு அமைச்சரும் முன்வந்து எடுக்காத சவாலை நான் எதிர்கொண்டு எரிபொருள் விலை உயர்வு குறித்து அறிவிப்பை விடுத்தேன்.

நான் அரசாங்கத்தை பலப்படுத்த எடுக்கும் நடவடிக்கை அரசாங்கத்தில் இருக்கும் நபர்களுக்கே பிரச்சினையாக உள்ளது என்றால் அரசாங்கத்தின் எதிரிகள் அரசாங்கத்திற்கு வெளியில் இல்லை, அரசாங்கத்திற்கு உள்ளேயே உள்ளனர்.  

எதிரியை கூட வைத்துக்கொண்டுள்ளோம் என்பதே இதன் வெளிப்பாடாகும். முதுகெலும்பு இல்லாத நபர்கள் ஒளிந்திருந்து கல்லடிக்கின்றனர். இது அவர்களின் ஒழுக்கத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றது.

சிறந்த தலைவன் என்பவன் சவால்களுக்கு மத்தியில் மக்களுக்காக நின்று போராடுபவன், இன்று நானும் அதே சவால்களை முன்னெடுத்து வருகின்றேன். சவால்களின் போதே ஒரு தலைவன் உருவாவதும் அதேபோல் தலைவர்கள் வீழ்வதும் இடம்பெறும். எனவே மக்கள் இதனை விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி