Tamil Leader News
முக்கியம்
விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●
செய்திகள்

கொழும்பு மாநகரசபை ஊழல்களை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு!

T

The Leader Desk

டிசம்பர் 31, 2025 • 4:25 AM

கொழும்பு மாநகரசபை ஊழல்களை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
  • ஏக்கநாயக்க மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ்.
  • ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கொழும்பு மாநகராட்சியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
எழுத்து அளவு:

சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் பியசேன ரணசிங்க, கணக்காளர் ஈ. ஆர். எம். எஸ். எச். ஏக்கநாயக்க மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கொழும்பு மாநகராட்சியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், மோசடி, குற்றவியல் நம்பிக்கை துரோகம், சொத்துக்களை முறையற்ற முறையில் கையாளுதல் போன்ற விடயங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வளங்கள் மற்றும் வரப்பிரசாதங்களை துஷ்பிரயோகம் செய்தல், சட்டவிரோத ஆட்சேர்ப்பு மற்றும் நியமனங்கள், சட்டவிரோத திட்டங்கள், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடும்போது இடம்பெற்ற முறைகேடுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்தல் ஆகிய பணிகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...