இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கரிம உரம் அடங்கிய மூன்று கொள்கலன்கள் நகர்ப்புர கழிவுப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுங்கத்தின் ஊடக செய்தியாளர் பிரதி சுங்கப்பணிப்பாளர் சுதன்த சில்வா கூறியுள்ளார்.

நகர்ப்புர கழிவகள் மற்றும் குப்பைகளை பயன்படுத்தி இந்த கரிம உரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த உரங்களின் தரத்தை பரிசோதிப்பதற்காக தாவரங்கள் மற்றும் தாவர தனிமைப்படுத்தல் துறை உட்பட சில துறைகளுக்கு மாதிரிகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களில் அறிக்கை கிடைக்கும் வரை கொள்கலன்களை துறைமுகத்திலேயே தடுத்து வைத்துக் கொள்வதாக சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் தமிழ்நாடு, மதுரை வாதிப்பட்டி, பாலமுருகன் கோவில் பாதையில் அமைந்துள்ள சத்யம் பயோ என்ற நிறுவனத்திலிருந்து இந்த உரம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. Taian Organic Fertilizer (PVT) Ltd என்ற நிறுவனமே இந்த கரிம உரங்களை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி