தற்போதுள்ள தரவுகளை ஆராய்ந்து நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்னர் எந்தவொரு தீவிரமான சூழ்நிலையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதி நீக்கப்படும் என தேசிய கொரோனா ஒழிப்பு நடவடிக்கை மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (08) தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், 14 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என்று நம்பப்படுவதாகவும், ஏதேனும் கடுமையான சூழ்நிலை ஏற்பட்டால் அது மாறும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இந்த மாதம் 14 ஆம் திகதியுடன் பயணக் கட்டுப்பாடு விதித்து 23 நாட்கள் ஆகின்றது என இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுக்கும் முடிவுகள் நிபுணர்களின் அறிவிப்புகள் மற்றும் கிடைக்கக்கூடிய தரவுகளை முழுமையாக ஆராய்ந்த பின்னர் மிகவும் திட்டமிட்ட முறையில் எடுக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க வேண்டுமா? இல்லையா? என்று நேற்றிரவு ஒலிபரப்பப்பட்ட நெத் எஃப்.எம் Unlimited நிகழ்ச்சியில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் இந்திக கருணாதிலக இவ்வாறு தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி