அடக்குமுறை நோக்கத்துடன் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக தொற்று நோய் காலத்தில் கூட புதிய தடுப்பு முகாம்கள் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் 2021 ஜூன் 4ம் திகதி வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கொழும்பு 5, கிருலப்பன அவென்யூ, 145ம் இலக்க இடம் 1979 இலக்கம் 46 பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் 9வது உறுப்புரையின் காரியங்களுக்காக தடுப்பு நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் அடக்குமுறை செய்யவிருக்கும் நபர்களை இந்த நிலையத்தில் தடுத்து வைக்க உத்தேசித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

சமூக ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை விமர்சித்தமையும், அரசியல் தலைமைத்துவத்தின் பலவீனங்களை கேலி செய்தமையும் காரணமாக புதிய அடக்குமுறை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தேவை சம்பந்தமாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஏற்கனவே கூறியிருந்தார்.

கருத்து சுதந்திரத்திற்கான அரசியலமைப்புச் சார்ந்த உரிமை மீறப்பட்டு இந்தக் காரணிகளின் கீழ் கைது செய்யப்படும் நபர்களை தடுத்து வைப்பதற்காக மேற்குறித்த நிலையம் பெயரிடப்பட்டுள்ளது தெரிகிறது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பு நிலையங்கள் அனைத்தும் கொவிட் வைரஸ் தடுப்பு தனிமைப்படுத்தல் நிலையங்களோடு இணைத்துள்ளமையால் புதிதாக கைது செய்யப்படவிருக்கும் நபர்கள் இந்த தடுப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படக் கூடுமென அனுமானிக்கப்படுகிறது.

எப்படியிருந்தாலும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது பதவியை பயன்படுத்தியே இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். ஆனால், இத்தகைய வர்த்தமானி அறிவித்தலொன்றில் ஒப்பமிடுவதற்கான அதிகாரம் பாதுகாப்பு அமைச்சருக்கே உண்டு.

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி