Tamil Leader News
முக்கியம்
விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●
செய்திகள்

'திஸ்ஸ விகாரை சட்டவிரோதம் என்று அரசு குழு தீர்ப்பளித்தால் ஏற்கத் தயார்!'

T

The Leader Desk

டிசம்பர் 30, 2025 • 11:45 PM

'திஸ்ஸ விகாரை சட்டவிரோதம் என்று அரசு குழு தீர்ப்பளித்தால் ஏற்கத் தயார்!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சட்டவிரோதம் என்று அரசு அமைத்துள்ள விசாரணைக் குழு தீர்ப்பளித்தால் அதனை ஏற்கத் தயார்' என்று, தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் தெரிவித்தார்.
  • அவர் மேலும் தெரிவிக்கையில், 'திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 3ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள்தான் நடைபெறும்.
  • அரசியல் நோக்கத்துக்காகக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்.
எழுத்து அளவு:

சட்டவிரோதம் என்று அரசு அமைத்துள்ள விசாரணைக் குழு தீர்ப்பளித்தால் அதனை ஏற்கத் தயார்' என்று, தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் தெரிவித்தார்.

அத்துடன், 'காணிப் பிரச்சினை தீர்க்கப்படும் வரையில் வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம்' என்றும் அவர் உறுதியளித்தார்.

தையிட்டி திஸ்ஸ விகாரையிள் உள்ள அவரின் வசிப்பிடத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

'திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 3ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள்தான் நடைபெறும். விசேட பூஜை வழிபாடுகள் எதற்கும் விகாராதிபதியாக நான் எதற்கும் இடமளிக்கவில்லை. தெற்கில் இருந்து புத்தர் சிலை எடுத்து வரப்படுகின்றது என்றும், அன்றைய தினம் விசேட பெரஹரா நடைபெறவுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அவ்வாறான எதற்கும் நான் அனுமதி வழங்கவில்லை.

அரசியல் நோக்கத்துக்காகக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். விகாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவென அரசால், புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் எமது விகாரைக்கான ஆவணங்களைக் கையளித்துள்ளோம். இதேபோன்று காணிகளைக் உரிமை கோரும் நபர்களும் தமது காணிகள்தான் என்பதற்கான ஆவணங்களைக் கையளித்துள்ளனர்.

இந்த விவாகரத்தில் இது ஒரு சட்டவிரோத செயல் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால் அதனையும் ஏற்க நான் தயார். விகாரை காணி விடுவிப்பு தொடர்பில் இதுவரை யாரும் என்னுடன் பேசவில்லை. அரச குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு மதிப்பளித்து விகாரை வளாகத்தில் எவ்வித மான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ளமாட்டோம்' என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...