Tamil Leader News
முக்கியம்
விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●
செய்திகள்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஜனவரி 3ஆம் திகதியும் போராட்டம்!

T

The Leader Desk

டிசம்பர் 30, 2025 • 11:32 PM

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஜனவரி 3ஆம் திகதியும் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி போராட்டம் நடைபெறும்.
  • அங்கு அவர்கள் தெரிவிக்கையில், "தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையானது 18 பேருக்கு சொந்தமான காணி.
  • இந்தப் பகுதியர் பாதுகாப்பு வலயமாக இருந்தபோது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்ட இந்த விகாரைக்கு எதிராக சுமார் 3 வருட காலமாக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
  • எங்கள் உறுதிகள் அனைத்தும் 1912ஆம் ஆண்டு முதல் முறையாக இருந்தமைக்கான பதிவுகள் அனைத்தும் எம்மிடமும் திணைக்களங்களிடமும் இருக்கின்றன ஆராயுங்கள்.
எழுத்து அளவு:

முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி போராட்டம் நடைபெறும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்' இவ்வாறு திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்ட அழைப்பை விடுத்தனர். அங்கு அவர்கள் தெரிவிக்கையில்,

"தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையானது 18 பேருக்கு சொந்தமான காணி. இந்தப் பகுதியர் பாதுகாப்பு வலயமாக இருந்தபோது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்ட இந்த விகாரைக்கு எதிராக சுமார் 3 வருட காலமாக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

"மக்களுடைய காணிகள் மக்களுக்கே வழங்கப்படும் எனக் கூறும் இந்த அநுர அரசாங்கம் இந்தக் காணிகளை விடுவிப்பதில் இரட்டை வேடம் போடுகின்றது. நாங்கள் இந்த ஆட்சியில் மட்டுமல்ல கடந்த அரசுகளின் காலத்திலும் இந்தக் காணி தனியாருடைய காணி என்பதற்கான சகல ஆதாரங்களையும் சமர்ப்பித்து விடுவிக்குமாறு கோரிய நிலையில் தற்போதைய அமைச்சர் சந்திரசேகர் உறுதிகளை ஆராய வேண்டும் எனக் கூறுகின்றார்.

"நீங்கள் எங்களின் உறுதிகளை ஆராயாமல் காணி தரவேண்டாம். எங்கள் உறுதிகள் அனைத்தும் 1912ஆம் ஆண்டு முதல் முறையாக இருந்தமைக்கான பதிவுகள் அனைத்தும் எம்மிடமும் திணைக்களங்களிடமும் இருக்கின்றன ஆராயுங்கள். எதிர்வரும் 3ஆம் திகதி திஸ்ஸ விகாரைக்கு மீண்டும் ஒரு புத்தர் சிலையை கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அன்றைய தினம் போராட்டம் நடைபெறவுள்ளது.

"காணிகளை மீட்பதற்கான எமது போராட்டம் சைக்கிள் கட்சியின் போராட்டமல்ல. எமது நிலம் ஆக்கிரமிக்கப்
பட்டு விகாரை கட்டப்பட்டமைக்கு எதிராக அனைத்து கட்சியினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், எம்மோடு இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க அவர்களே முன் வந்தார்கள். நாங்கள் யாரையும் குறை கூறுவதற்காக கூறவில்லை. எமது போராட்டம் எமக்கானதாக மட்டும் நினைத்து விட வேண்டாம். இன்று தையிட்டி மக்களின் காணிகளில் எப்படி விகாரை அமைக்கப்பட்டதோ அவ்வாறே நாளை உங்களுடைய காணி களிலும் விகாரை அமைக்கப்படும். கேட்டால் இது பௌத்த சிங்கள நாடு என்று கூறுவார்கள்.

"தற்போது வவுனியாவில் புதிதாக புத்தர் சிலை முளைக்கின்றது. இதேபோல் உங்கள் வீடுகளின் பின்புறமும் புத்த விகாரைகளை அமைப்பார்கள். நாங்கள் கேள்வி கேட்க முடியாதவர்களாக தொடர்ந்துளாக்கப்படுவோம். நயினாதீவு விகாராதிபதி எமது நியாயமான போராட்டத்தை ஆதரித்துள்ள நிலையில் எங்களில் சிலர் கேட்கின்றார்கள் விகாரை கட்டும் வரை எங்கிருந்தீர்கள் என்று. அவர்களிடம் நாம் தெரிவிப்பது ஒன்றே விகாரை கட்டும்போது எமக்குத் தெரியாது. கட்டப்பட்ட விகாரைக்கு எதிராகப் போராடி வரும் நிலையில் மூன்று புதிய கட்டடங்களை விகாரைக்குள் கட்டி விட்டார்கள் தடுக்க முடிந்ததா?" என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...