Tamil Leader News
முக்கியம்
65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●
செய்திகள்

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்!

T

The Leader Desk

டிசம்பர் 30, 2025 • 3:46 AM

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காலி முகத்திடல் பகுதிக்கு வருகை தருவார்கள் என பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.
  • காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து மாக்கன் மாக்கர் மாவத்தை வழியாக பயணித்து பாலதக்ஷ மாவத்தை ஊடாக காலி வீதி நோக்கியோ பயணிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கடமைகளுக்காக சுமார் 1,200 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
  • கொழும்புக்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்காக விசேட வாகன தரிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு சுமார் 5,900 வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதிகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

காலி முகத்திடல் பகுதிக்கு வருகை தருவார்கள் என பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, இதன்போது ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸார் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு குறிப்பாக கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், நாளை இந்தப் பொலிஸ் பிரிவுகளில் போக்குவரத்து வழமை போல் இடம்பெறும் என்பதுடன், கடும் நெரிசல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் தேவைக்கேற்ப பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி வீதி ஊடாக கொழும்பிலிருந்து வெளியேறுதல் - என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், காலி வீதி, பாலதக்ஷ மாவத்தை சந்தியில் இடதுபுறமாக (எம்.ஓ.டி சந்தி) திரும்பி, பாலதக்ஷ மாவத்தை, மாக்கன் மாக்கர் மாவத்தை, காலி முகத்திடல் சுற்றுவட்டம் ஊடாக கொள்ளுப்பிட்டி நோக்கிச் செல்ல முடியும்.

காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலதக்ஷ மாவத்தை சந்தி வரை மற்றும் அதற்கு அப்பால் செல்ல முடியும்.

காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து மாக்கன் மாக்கர் மாவத்தை வழியாக பயணித்து பாலதக்ஷ மாவத்தை ஊடாக காலி வீதி நோக்கியோ பயணிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலதக்ஷ மாவத்தையின் கிளை வீதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாகத் திரும்பி கொழும்பிலிருந்து வெளியேற முடியும். காலி வீதியின் கிளை வீதிகளிலிருந்து நுழையும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாகத் திரும்பி NSA சுற்றுவட்டம் நோக்கிச் செல்ல வேண்டும்.

இந்த போக்குவரத்துத் திட்டத்தின் போது கொழும்பு நகரின் நடைபாதைகளிலோ அல்லது பிரதான வீதிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.

இவ்வாறான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கடமைகளுக்காக சுமார் 1,200 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கொழும்புக்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்காக விசேட வாகன தரிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு சுமார் 5,900 வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதிகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்! | Tamil Leader | We Lead the Nation