பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று சனிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் நடந்த ஒரு இரகசிய நிகழ்வில் கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்துகொண்டதாக சன் மற்றும் மெயில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும் பொரிஸ் ஜோன்சனின் டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தின் ஊடக பேச்சாளர் இந்த செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

மத்திய லண்டனில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு இறுதி நிமிடத்தில் விருந்தினர்கள் அழைக்கப்பட்டதாகவும் ஜோன்சன் அலுவலகத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு கூட திருமணத் திட்டங்கள் தெரியாது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இங்கிலாந்தில் திருமண வைபவங்களில் பங்கேற்க தற்போது 30 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

56 வயதான பொரிஸ் ஜோன்சனும் 33 வயதான சைமண்ட்ஸிம் 2019 இல் பிரித்தானிய பிரதமராக ஜோன்சன் பதவியேற்றத்தில் இருந்து டவுனிங் தெருவில் ஒன்றாக வசித்து வருகின்ற நிலையில் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

இதனை அடுத்து 2022 ஜூலை திருமணம் செய்துகொள்ளும் முகமாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு திருமண அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன என்றும் சன் மற்றும் மெயில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு முறை விவாகரத்து செய்துள்ள பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு இது மூன்றாவது திருமணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி