Tamil Leader News
முக்கியம்
மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●சில மணிநேரக் கனமழையால் கொழும்பு முடங்கிய விந்தை!●நுவரெலியா அஞ்சல் கட்டிடம் சுற்றுலா மையமாகிறது: பொதுமக்களின் பணத்திற்கு நீதி கிடைக்குமா?●இலங்கையின் நீல நண்டுக்கு உலகளாவிய சான்றிதழ்: ஆசியாவுக்கே முன்னுதாரணம்!●டயர் தரக் கட்டுப்பாட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் பரிசோதனை வசதிகளின்றி நெருக்கடி!●ABU மாநாட்டின் மூலம் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த உலகளாவிய வாய்ப்பு!●உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் சரிவு: பிணைமுறைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம்!●
செய்திகள்

மக்களின் மேம்பாட்டுக்காக மோடியினால் 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

T

The Leader Desk

ஜூலை 24, 2023 • 8:13 AM

மக்களின் மேம்பாட்டுக்காக மோடியினால் 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மில்லியன் ரூபா கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும்.
  • இரு நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு 21 ஆம் திகதி நாடு திரும்பிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், கொழும்பு - கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
  • மலையக மக்களின் பிரச்சினைகள், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம், எரிசக்தி மற்றும் மின்சக்தி துறைக்கான முதலீடுகள் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன.
  • மலையக பெருந்தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்காக 3 ஆயிரம் மில்லியன் ரூபா வழங்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

மில்லியன் ரூபா கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும்.

இதில் மலையகத்துக்கான பல்கலைக்கழக திட்டமும் உள்ளடங்கும் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இரு நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு 21 ஆம் திகதி நாடு திரும்பிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், கொழும்பு - கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தியா சென்றிருந்தோம். மலையக மக்களின் பிரச்சினைகள், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம், எரிசக்தி மற்றும் மின்சக்தி துறைக்கான முதலீடுகள் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன. இவை தொடர்பில் சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன.

இதில் குறிப்பாக மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசும் போது, வீடுகளை நிர்மாணிப்பதால் மாத்திரம் பிரச்சினை தீராவது, வீடுகள் அமைக்கப்பட்ட பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை - வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு கல்வியே திறந்த தேர்வாக அமையும் என சுட்டிக் காட்டியிருந்தேன்.

மலையக பெருந்தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்காக 3 ஆயிரம் மில்லியன் ரூபா வழங்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதார துறைக்கு அந்நிதி பயன்படுத்தப்படும்.

இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான அரச அங்கீகாரத்துடனான தேசிய விழா நவம்பரில் நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறப்பு தூதுவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கின்றேன்.

அதேவேளை, எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வக்கட்சி கூட்டத்தை ஜனாதிபதி கூட்டியுள்ளார். இதன்போது 13 தொடர்பான ஆவணம் முன்வைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். ஆக மொத்தத்தில் இந்திய விஜயம் வெற்றிகரமாக அமைந்தது." - என தெரிவித்தார்.



-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மக்களின் மேம்பாட்டுக்காக மோடியினால் 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு | Tamil Leader | We Lead the Nation