Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

அவசரகால சட்டம் தொடர்பான 3 மனுக்களை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

T

The Leader Desk

ஆகஸ்ட் 10, 2022 • 1:22 PM

அவசரகால சட்டம் தொடர்பான 3 மனுக்களை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோத்தாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
  • இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு மனுவினூடாக கோரப்பட்டுள்ளதால், மனு மீதான விசாரணையை மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என அரச சிரேஷ்ட சட்டத்தரணி கூறினார்.
  • இந்த மனுக்கள் தொடர்பில் சில ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ் குணதிலக்க தெரிவித்தார்.
எழுத்து அளவு:

உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோத்தாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த மனுக்கள் தொடர்பில் சில ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ் குணதிலக்க தெரிவித்தார்.

தற்போது குறித்த மனுக்களை பரிசீலனைக்கு எடுப்பதற்கும் அவர் ஆட்சேபனை தெரிவித்தார்.

இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு மனுவினூடாக கோரப்பட்டுள்ளதால், மனு மீதான விசாரணையை மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என அரச சிரேஷ்ட சட்டத்தரணி கூறினார்.

அவசர விடயம் தொடர்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், அவற்றை விரைவாக பரிசீலனை செய்ய வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.

ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபரும், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...