கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் மத குருமாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று (28.05.2021) தொலைபேசியில் உரையாடியபோதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கான தடுப்பூசி விநியோகம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரினால் தொடர்ச்சியாக அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டு வருகின்றமையை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,

முதற் கட்டமாக 50,000 தடுப்பூசிகள் யாழ் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பிரதேசங்களுக்கு அவை சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும்   தெரிவித்தார்.

ஜனாதிபதியின் குறித்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிப்புக்கள் அதிகமுள்ள பகுதிகளில் வசித்து வருகின்ற அனைத்து மதங்களின் குருமாருக்கும் முன்னுரிமை அளிப்பது அவசியம் என்ற கருத்தையும் முன்வைத்தார்.

குறித்த கருத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.

அதேவேளை, பௌத்த சாசன மத விவகார அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்கள் அவர்களும் தடுப்பூசி வழங்கும் போது பாதிப்புக்கள் அதிகமுள்ள பிரதேசத்தில் வசிக்கின்ற அனைத்து மதங்களினதும் குருமாருக்கு முன்னுரிமை அளிப்பது  தொடர்பாக அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (28.05.2021) அரியாலை, பூம்புகார் சண்முகா முன்பள்ளியில் அமைக்கப்படவுள்ள இளைப்பாறு மண்டபத்திற்கான அடிக்கல்லினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார். 

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறங்கள் இன் படமாக இருக்கக்கூடும்

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறங்கள் இன் படமாக இருக்கக்கூடும்

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர், மரம் மற்றும் புல் இன் படமாக இருக்கக்கூடும்

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி