கப்பல் மூலம் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

அமிலக் கசிவைத் தொடர்ந்து கப்பல் கட்டாரில் உள்ள ஹமாத் துறைமுகத்திற்குள் நுழைய முயன்றுள்ளது. எனினும், அமிலக் கசிவு காரணமாக கட்டார் அரசு கப்பலை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை.

அவ்வாறாயின், இவ்வாறு அபாயம் நிலவும் சந்தர்ப்பத்தில் இலங்கையின் கடற்பரப்பிற்குள் திடீரென எவ்வாறு பிரவேசித்தது என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு குறித்து பலமுறை பேசும் அரசாங்கம், இலங்கை கடற்பரப்பிற்குள் இதுபோன்ற ஆபத்தான கப்பல் வரும் வரை ஏன் அமைதியாக இருந்தது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அறிக்கை மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி