ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் முதல் வருடத்தில் செலவுகள் போக 300 கோடி ரூபாய் மிச்சப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் , மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் முதல் வருடத்தில் 510 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டதப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் கடந்த 24ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது ஊடக பேச்சாளர் ரமேஷ் பத்திரன மூலம் வெளியானது.

ஊடக சந்திப்பின்போது "மந்திரிமார்களுக்கு அதிசொகுசு வாகனங்களை வாங்குவதற்காக இந்த நிலைமையில் 350 கோடி ரூபாய் ஒதுக்கியது எவ்வாறு? என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அமைச்சர் ரமேஷ் பத்திரன "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்காக 300 கோடி ரூபாவை மிச்சப்படுத்தியுள்ளதாக கூறினார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தபோது 2014 ஆம் வருடம் 857 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. பின்னர் மைத்திரிபால ஜனாதிபதியாகவிருந்தபோது 2015 இல் 347 கோடி ரூபாவே மொத்தமாக செலவழிக்கப்பட்டுள்ளது. ஆக மகிந்த ராஜபக்சவை காட்டிலும் மைத்திரிபால சிறிசேன 510 கோடி ரூபாய் குறைவாக செலவளித்துள்ளார்.

தற்பொழுது கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு நாட்டு மக்கள் மிகமோசமாக முகம்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கத்தின் வீண்செலவு தொடர்பில் பாரியளவு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதனால் அரசாங்கத்தரப்பு தாம் 300 கோடி ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளதாக கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி