கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் முழுமையாக அழிந்தால் இலங்கையில் அமில மழை பெய்யும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மழை பெய்யுமாயின் இலங்கையின் கடல் கட்டமைப்பு உட்பட முழு சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதோடு கப்பலில் உள்ள இரசாயனங்கள் காரணமாக நீண்டகால பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் ஆணையத்தின் தலைவர் எஸ்.அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கப்பலுக்குள் நைட்ரிக் எசிட் 25 டன் உள்ளதாக அவர் குறிப்பிட்ட அவர் , கப்பலின் 1,487 கொள்கலன்கள் உள்ள நிலையில் அவை 74,000 டன் நிறைகளை கொண்டுள்ளதெனவும் கூறியுள்ளார்.

எனவே கடலில் விழும் பொருட்களை மக்கள் தொடுவதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இதன் ஆபத்துக்கள் குறித்து இன்னமும் ஆராயப்படுகின்ற நிலையில் மக்கள் இதனை கையில் எடுப்பதனை தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி