1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதுர்தீன் ஆகியோர் சிஐடி யால் கைது செய்யப்பட்டு இன்றுடன் (மே 24) ஒரு மாதமாகின்றது.

இருவரும் ஏப்ரல் 24, 2021 காலை,2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

eishad 1 month

இருப்பினும், இருவரையும் இதுவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை, நீதிமன்றம் அல்லது சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்காமல் நிர்வாக மற்றும் அரசியல் காரணங்களுக்காக ரிஷாத் பதியுதீனை அரசாங்கம் தடுத்து வைத்திருப்பதாக சட்டத்தரனி ருஷ்டி ஹபீப் குற்றம் சாட்டியுள்ளார்.

 

அடிப்படை உரிமைகள் மனு:

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தன்னை விடுவிக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ரிஷாத் பதியுதீன் தான் கைது செய்யப்பட்டதற்கு எந்த நியாயமும் இல்லை என்றும், சிறுபான்மை அரசியல் கட்சியின் தலைவரான தன்னை இக்கைதின் மூலம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தவும் பதிலடி கொடுக்கும் நோக்கமாகவும் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் மறுத்துள்ளார், மேலும் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார்.

"நீதிமன்றங்கள் அல்லது சட்டமா அதிபர் துறைக்கு எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை."

இதற்கிடையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் சிஐடியின் காவலில் இருக்கும் எம்.பி. ரிஷாத் பதியுதீன், மே (18) அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசாங்கத்தின் அரசியல் தடைகளுக்கு மத்தியில் கலந்து கொண்டார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இருபது ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் தலைவரை மூன்று மாதங்கள் தடுத்து வைக்க ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்துவது எவ்வாறு நியாயமானது என்று கேட்டார்.

 "நான் ஏதேனும் தவறு செய்திருந்தால், அதை நீதிக்கு முன் கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லது சட்டமா அதிபர் துறைக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் நான் 22 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன், இதுவிடயமாக எந்த அறிக்கையும் இதுவரை நீதிமன்றத்திலோ அல்லது சட்டமா அதிபர் துறையிலோ சமர்ப்பிக்கப்படவில்லை.

நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று மரண தண்டனையாவது விதிக்கவும். அல்லது என்னை விடுவிக்கவும், ”என்றார்.

வாக்கெடுப்பைத் திசைதிருப்ப இரையாக்கப்பட்டுள்ளார்.!

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று (24) ட்விட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 30 நாட்கள் ஆகின்றன. 90 களில் இருந்து சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளம் உறுப்பினராக ரிஷாத் பதியுதீனை நான் அறிந்திருக்கிறேன். அவர் ஒரு இறை பக்தியுள்ள முஸ்லிம், அவர் ஒருபோதும் தீவிரவாதத்தில் ஈடுபடமாட்டார் திறமையற்ற நிர்வாகத்திலிருந்து கவனத்தை திசை திருப்ப இலங்கை தவறியதற்கு ரிஷாத் பதியுதீன் இரையாக்கப்பட்டுள்ளார்.

MS tw

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி