வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வந்த பிசிஆர் சோதனைகள் நேற்று முதல் முடங்கியுள்ளன.

பிசிஆர் சோதனைக்குரிய உபகரணங்கள் மற்றும் இரசாயனங்கள் இல்லாமையால் தற்காலிகமாக இந்தப் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தொற்றாளர்களை அடையாளம் காணுவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வந்த பிசிஆர் சோதனைகள் நேற்று முதல் முடங்கியுள்ளன. பிசிஆர் சோதனைக்குரிய உபகரணங்கள் மற்றும் இரசாயனங்கள் இல்லாமையால் தற்காலிகமாக இந்தப் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தொற்றாளர்களை அடையாளம் காணுவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் இருந்து பிசிஆர் பரிசோதனைக்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன.அதற்குரிய உபகரணங்கள் இயந்திரங்கள் என்பவை கிடைக்கப் பெறுவதில் சிக்கல் நிலைமை காணப்பட்டன. எக்ஸ்ரக்ஸன் ரீஏஜென்ட்ஸ் O எனப்படும் இரசாயனப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் மூன்று நாளைக்கு சமூக மட்டத்திலான பிசிஆர் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சமூக மட்டத்திலான பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளாமல் அவசர தேவை கருதி சில சோதனைகளை மட்டும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிசிஆர் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படாது தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி