உயர்நீதிமன்றம் பரிந்துரைக்கும் அனைத்து திருத்தங்களையும் கொழும்பு துறைமுக ஆணைக்குழு சட்டமூலத்திற்கு, குழுநிலை விவதாத்திற்கு உள்ளடக்கப்பட்டால் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றிக் கொள்ள முடியுமென உயர்நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இது சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் நேற்று (18) அறிவித்தார்.

இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமென உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தவறான கருத்தொன்று நாட்டில் பரவலாகி வருவதாகவும் உண்மையான நிலைமை அதுவல்ல எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

“சட்டமா அதிபர் திணைக்களத்தின் வாயிலாக அரசாங்கம் உயர் நீதிமன்றத்திற்கு பல திருத்தங்களை முன்வைத்தது. அந்த வழக்கின் தீரப்பை வாசித்துப் பார்த்தால், உயர்நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டதாக அதில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் திருத்தங்கள், குழுநிலையின் போது சட்டமூலத்தில் உள்ளடக்கினால் எந்தப் பிரச்சினையும் கிடையாது. எளிய பெரும்பான்மையினால் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியுமென அந்த தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

“அப்படியானால், அரசாங்கத்தின் சார்ப்பில் நேற்று நான் கூறினேன், உயர்நீதமன்றம் பரிந்துரைக்கும் சகல திருத்தங்களையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறதென்று. வியாழக்கிழமை பின்னேரம் இடம் பெறவிருக்கும் குழுநிலை விவாதத்தின் போது சபாநாயகர் இவற்றை முன்மொழிவார். அதன்பின்னர், அவை சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டதன் பின்பு விசேட பெரும்பான்மை தேவைப்படாது. மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒருபோதும் தேவைப்படாது. எளிய பெரும்பான்மையால் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும்” என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி