கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை கவனத்திற் கொள்ளாமல் நாட்டின் வளங்களை விற்பனை செய்ய இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்தார்.

மேலும் இவ்வாறு வளங்களை விற்று தங்களின் பைகளை நிரப்பிக்கொள்ளவே இந்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அத்தோடு கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 99 வருடங்களுக்கு குத்தகைக்கு மட்டுமே கொடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரம் தற்போது சீனாவிற்கு முழுமையாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டினார்.

மேலும் கொழும்பு துறைமுக நகருக்கு செல்ல சீன தூதரகம் அழைப்பு விடுத்துள்ளமையை சுட்டிக்காட்டிய அவர், இந்த நடவடிக்கை சுங்கத்திற்கு சென்று வரும்போது வரிசெலுத்துவதை போன்ற செயற்பாடு என்றும் குற்றம் சாட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி