ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உச்சநீதிமன்றத்தில் அடிப்டை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் மனுதாரர்களாக பொலிஸ்மா அதிபர், சி.ஐ.டி பணிப்பாளர், சி.ஐ.டி பொறுப்பான சிரேஸ்ட டி.ஐ.ஜி, சி.ஐ.டி யின் ஓ.ஐ.சி மற்றும் நீதிபதி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 24 காலை தனது வீட்டிற்குள் நுழைந்த சிஐடி அதிகாரிகள் குழுவால் தான் கைது செய்யப்பட்டதாக மனுதாரர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தனது மனுவில், ரிஷாத் பதியுதீன், கொலோசஸ் (பிரைவேட்) லிமிடெட் என்ற நிறுவனத்துடனான தனது உறவை கேள்விக்குட்படுத்த விரும்புவதாக அங்கு வந்திருந்த சிஐடி அதிகாரிகள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் சிஐடியால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்பிறகு தனது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார்.

கைது செய்யப்பட்டதற்கு எந்த நியாயமும் இல்லை என்று கூறிய ரிஷாத் பதியுதீன், சிறுபாண்மை அரசியல் கட்சியின் தலைவரான தன்னை தர்மசங்கடத்திற்குள்ளாக்குவதாகவும் பழிவாங்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களில் தனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், சிஐடியால் கைது செய்யப்பட்டிருப்பது அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது என்று தீர்ப்பு வழங்கவும் என்றும் தன்னை எந்தவொரு நிபந்தனையிலும் விடுவிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு ரிஷாத் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரான ரிஷாத் பதியுதீனின் அலுவலக சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஈஸ்டர் தாக்குதல் மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுடன் கலந்தாலோசிக்காமல் நிர்வாக மற்றும் அரசியல் காரணங்களுக்காக ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவரை கைது செய்ய நீதிமன்றமோ அல்லது சட்டமா அதிபரோ பரிந்துரைக்கவில்லை.

"நான் ஏதாவது தவறு செய்திருந்தால் எனக்கு மரண தண்டனையையாவது கொடுங்கள்" - ரிஷாத் பதியுதீன்

 

இதற்கிடையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் சிஐடியின் காவலில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இன்று (18) அரசியல் தடைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றார்.  

நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

"நாட்டின் ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, எந்தவொரு நீதிமன்றத்திலிருந்தோ அல்லது சட்டமா அதிபரின் திணைக்களத்திடமிருந்தோ எந்தவொரு சட்ட ஆலோசனையுமின்றி அதிகாலை 1:30 மணியளவில் எனது வீட்டிற்குல் வலுக்கட்டாயமாக நுழைந்து, எந்த வித குற்றமும் இல்லாத என்னை கைது செய்தனர்.

20 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் தலைவரை தடுத்து வைக்க ஜனாதிபதியின் அதிகாரத்தை இவ்வாறு பயன்படுத்துவது  எந்த விதத்தில் நியாயமானது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"நான் ஏதேனும் தவறு செய்திருந்தால், என்னை நீதி மன்றத்திற்கு முன் கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லது சட்டமா அதிபர் பொலிசாருக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் நான் 22 நாட்களான எதுவித விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளேன், நான் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக எந்த அறிக்கையும் இதுவரை நீதிமன்றத்திலோ அல்லது சட்டமா அதிபரிடமோ சமர்ப்பிக்கப்படவில்லை.

நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று மரண தண்டனையையாவது விதிக்கவும். "அல்லது என்னை விடுவிக்கவும்" என்றார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பத்து குற்றச்சாட்டுகளை அப்போதைய பிரதி பொலிஸ்மா அதிபர், தற்போதைய பொலிஸ் மா அதிபர். நியமித்த விசேட பொலிஸ் குழு விசாரித்ததாகவும், அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் கூறினார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரித்தபின், ஈஸ்டர் தாக்குதல்கள் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர் ஈடுபடவில்லை என்று அப்போதைய பிரதிபொலிஸ் மா அதிபர் நாடாளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் தனக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மையினரின் ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவர் எதிர்க்கட்சியில் இருப்பதால் பதிலடி பலிவாங்க வேண்டாம் என்று அவர் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி