தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, அவருக்கு வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் தொடர்பில் குறித்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. முன்னால் அமைச்சர் கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு பாதாள உலகக் குழுத் தலைவரான 'மாகந்துரே மதூஷ்' என்பவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதூஷிடமிருந்து கண்டெடுக்கப்பட்ட அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைப் பரிசோதித்த போது, அது தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது குறித்து அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்துத் தெளிவான விளக்கத்தை வழங்கத் தவறியமையால் அவர் அன்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று (28) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.


