தொடர்பாக விரிவான விசாரணையை ஆரம்பிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சருக்கு எதிராக, அவர்கள் சொத்துக்களை ஈட்டிய விதம் குறித்து இவ்வாறு விசாரணை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்க, குமார ஜயகொடி, சுனில் ஹந்துனெத்தி, நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கு எதிராகவே இந்த விசாரணைகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஊழல் மற்றும் வீணடிப்புக்கு எதிரான சிவில் அதிகார அமைப்பின் (Citizens' Power Against Bribery, Corruption and Waste) தலைவர் ஜாமுனி காமந்த துஷாரவினால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாகவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, ஜாமுனி காமந்த துஷாரவை நாளை மறுதினம் (30ஆம் திகதி) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


