என் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்த முயன்றால் பகிரங்கப்படுத்த முடியாத சட்ட மற்றும் பிற இரகசியங்கள் நாட்டிற்கு அம்பலப்படுத்தப்பட வேண்டிவரும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

எனது கணவர் சேனகா டி சில்வா வழங்கிய கட்சியே (தற்போதைய சஜபவே)  ஐக்கிய மக்கள் சக்தி என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிகமாக துள்ளினால் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்றுக் குழு சார்பாக வழக்கறிஞர் சுதத் விக்ரமரத்ன மார்ச் 10 ம் திகதி தனக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவருக்கு பதில் அனுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட 20 வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கட்சி முடிவு செய்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே 20-க்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி ஒழுக்கத்தை மீறியதாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தை சட்டத்தரணி சுதத் விக்ரமரத்ன அனுப்பியுள்ளார்.

ஒழுக்கத்தை மீறியதாகக் குற்றம் சாட்டி தனக்கு அனுப்பிய கடிதத்திற்கு டயானா கமகே பதிலளித்துள்ளார், கட்சி அமைக்கப்பட்டபோது தனது கணவருடன் எட்டிய இரகசிய ஒப்பந்தங்களை மீறி இதுபோன்ற கடிதங்கள் தனக்கு அனுப்பப்பட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பதில் அளித்துள்ளார். 

அத்தகைய நடவடிக்கையில், நீங்கள் வைத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியையும் இழக்க நேரிடும் என்று டயானா கமகே தனது கடிதத்தில் சஜித் பிரேமதாசவை எச்சரித்துள்ளார்.

எனவே, மார்ச் 25 ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே எதிர்க்கட்சி தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில், எதிர்காலத்தில் இதுபோன்ற  'ஒழுக்காற்று விஷயங்கள்' என்ற தலைப்பில் கடிதங்கள் வந்தால், சஜித் பிரேமதாச சம்பந்தப்பட்ட ரகசியங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவேன் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து அவருக்கு அறிவித்துள்ள வழக்கறிஞர் சுதத் விக்ரமரத்ன டயானா கமகேவுக்கு அனுப்பிய கடிதம் பின்வருமாறு.

Diana 1

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி