Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

சீரற்ற காலநிலை :நுவரெலியா மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிப்பு!

T

The Leader Desk

நவம்பர் 27, 2024 • 4:05 PM

சீரற்ற காலநிலை :நுவரெலியா மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நுவரெலியா மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • சீரற்ற காலநிலை காரணமாக 147 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 75 குடும்பங்களைச் சேர்ந்த 298 பேர் 7 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
  • நுவரெலியா, கந்தபளை கோட்லோட்ஜ் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 37 குடும்பங்களைச் சேர்ந்த 161 பேர் குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள சமர்ஹில் பாடசாலையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
  • மேலும், கொங்கோடியா தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் கோவிலில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

நுவரெலியா மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (27) மாலை 4 மணி வரை நிலவரப்படி நுவரெலியா மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக 147 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 75 குடும்பங்களைச் சேர்ந்த 298 பேர் 7 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா, கந்தபளை கோட்லோட்ஜ் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 37 குடும்பங்களைச் சேர்ந்த 161 பேர் குறித்த தோட்டத்தில் அமைந்துள்ள சமர்ஹில் பாடசாலையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

03

மேலும், கொங்கோடியா தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் கோவிலில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வலப்பனை குருதுஓயா அல்மா பாலர் பாடசாலையில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேரும், பண்டிதாயகும்புர பாடசாலையில் உள்ள பாதுகாப்பான நிலையத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும் தங்கியுள்ளனர்.

மேலும், கொத்மலை டன்சினன் கொரெஞ்சி பாடசாலையில் உள்ள பாதுகாப்பான இடத்தில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் தங்கியுள்ளனர்.

ஹங்குராங்கெத்த திகலஹின்ன சனசமூக மண்டபம் மற்றும் ஹோப் மத்திய பிரிவு தோட்டக் கட்டிடத்தில் 02 பாதுகாப்பான நிலையங்களும் திகலஹின்ன சனசமூக மண்டபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் ஹோப் மத்திய பிரிவு தோட்டக் கட்டிடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 08 பேரும் தங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...