Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!

T

The Leader Desk

ஜூன் 6, 2022 • 4:44 AM

சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டின் சமகால பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகவே அவர் இந்த உரையின்போது விசேடமாக கருத்து வெளியிடவுள்ளார்.
  • மேலும், நாளை கூடவுள்ள பாராளுமன்றில் 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணையையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பிரதமரின் உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதமும் நாளை மாலை வரை நடைபெறவுள்ளது.
எழுத்து அளவு:

நாட்டின் சமகால பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகவே அவர் இந்த உரையின்போது விசேடமாக கருத்து வெளியிடவுள்ளார்.

பிரதமரின் உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதமும் நாளை மாலை வரை நடைபெறவுள்ளது.

மேலும், நாளை கூடவுள்ள பாராளுமன்றில் 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணையையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய அரச சேவைகளைத் தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த குறைநிரப்பு மதிப்பீடு பிரேரணையை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த பிரேரணை மீதான விவாதம் புதன்கிழமை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் 2022.04.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கமைய ஒழுங்குவிதி மற்றும் கடன் எல்லையை ஒரு ரில்லியன் ரூபாவினால் அதிகரிப்பதற்கு உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டத்தின் கீழான தீர்மானமும் நாளைய அமர்வில் விவாதமின்றிய நிலையில் நிறைவேற்றப்படவுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...