Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

21ஆவது திருத்தத்தின் ஊடாக தனது அதிகாரங்களை குறைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம்!

T

The Leader Desk

ஏப்ரல் 19, 2022 • 2:31 AM

21ஆவது திருத்தத்தின் ஊடாக தனது அதிகாரங்களை குறைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • சட்டவாக்கத்துறை,நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்துறைகளின் சாதகமான காரணிகளை உள்ளடக்கிய வகையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்து செய்து அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை திருத்தங்களுடன் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
எழுத்து அளவு:


இந்நிலையில், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போதைய அரசின் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
திருத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும் என பிரதமர் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினர் முன்வைத்த யோசனைகளை கருத்திற்கொண்டு அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சட்டவாக்கத்துறை,நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்துறைகளின் சாதகமான காரணிகளை உள்ளடக்கிய வகையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இரத்து செய்து அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை திருத்தங்களுடன் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

“தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்த வாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் முன்மொழிந்திருந்தார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்கி 19ஆவது திருத்தத்தின் சிறந்த விடயங்களை உள்ளடக்கிய வகையில் 21ஆவது திருத்தத்தை விரைவாக கொண்டு வர வேண்டும் என அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

21ஆவது திருத்தத்தின் ஊடாக தனது அதிகாரங்களை குறைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம்! | Tamil Leader | We Lead the Nation